தனிப்பட்ட முறையில் பல பிரச்சனைகளை சந்தித்தேன்-நஸ்ரியா
சினிமா
நேரம், ராஜாராணி, நய்யாண்டி, திருமணம் என்னும் நிக்கா உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நஸ்ரியா. தொடர்ந்து மலையாள திரை உலகிலும் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார்.
பிரபல நடிகர் பகத்பாசிலை திருமணம் செய்து கொண்டு கேரளாவில் வசித்து வரும் நஸ்ரியா, சினிமா, பொதுநிகழ்ச்சி, சமூக வலைதளங்களில் மிகுந்த ஆக்டிவாக இருந்து வருபவர்.
இந்நிலையில் சில மாதங்களாக நஸ்ரியா சினிமா, சமூக வலைதளங்கள் என எந்த தொடர்பில்லாமல் இருந்து வந்தார்.
இது குறித்து நஸ்ரியாபகத் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது சமூக வலைதள பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
நான் ஏன் இவ்வளவு நாள் வெளியே வரவில்லை என்பதை சொல்ல விரும்புகிறேன். சினிமா உள்பட என்னை சார்ந்த அனைவரோடும் தொடர்பில் இருப்பேன்.
ஆனால் கடந்த சில மாதங்களாக உணர்வுப் பூர்வமாகவும், தனிப்பட்ட முறையிலும் சில பிரச்சனைகளையும், கஷ்டத்தையும் சந்தித்தேன்.
என் 30-வது பிறந்தநாள், புத்தாண்டு, நான் நடித்த 'சூக்ஷூமதர்ஷினி' படத்தின் வெற்றி என எல்லாவற்றையும் நான் கொண்டாட தவறி விட்டேன்.
யாருடைய செல்போன் அழைப்பையும், குறுஞ்செய்தியையும் நான் எடுக்கவில்லை. இதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது கடினமான சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவேன். அதற்கு இன்னும் கொஞ்ச காலம் தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.






















