பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து - நால்வர் காயம்
இலங்கை
ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் டிக்கோயா நகருக்கு அருகில் முச்சக்கர வண்டியொன்று பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விபத்தின் போது விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியின் சாரதி அதிக அளவில் மதுபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
குறித்த பேருந்தின் சாரதி ஹட்டன் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.























