• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புத்தாண்டின் இரு நாட்களில் 412 பேர் வைத்தியாசலையில் அனுமதி

இலங்கை

புத்தாண்டின் இரண்டு நாட்களில் பல்வேறு விபத்துக்கள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் 412 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் இந்திக ஜாகொட தெரிவித்துள்ளார்.

அவர்களில் ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தனர்.

மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த நோயாளிகளில் 80 பேர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இந்த விபத்துகளில் அதிக எண்ணிக்கையிலானவை வீடுகளில் பதிவாகியுள்ளன.

அந்த விபத்துகளில் காயமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 110 ஆகும்.

மேலதிகமாக வீதி விபத்துக்கள் காரணமாக 94 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

Leave a Reply