
ஆண் குழந்தையை வரவேற்ற மன்னரின் உறவினர் மகள்
பிரித்தானியாவில் மன்னர் சார்லஸின் உறவினரின் மகளான லேடி டாட்டியானா மவுண்ட்பேட்டன் ஆண் குழந்தையை வரவேற்றார்.
ஜார்ஜ் மவுண்ட்பேட்டனின் மகளும், மன்னர் சார்லஸின் உறவினருமான லேடி டாட்டியானா இரண்டாவது குழந்தையை வரவேற்றுள்ளார்.
அவர் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததை, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், தனது குழந்தைக்கு தனித்துவமான மற்றும் அர்த்தமுள்ள பெயரைப் பகிர்ந்து கொண்டார்.
தனித்துவமான பெயர்
புதிதாக பிறந்த குழந்தையை 'Auberon' அல்லது சுருக்கமாக 'Albie' என்று அழைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் டாட்டியானா தனது மூத்த குழந்தை எலோடியின் பல புகைப்படங்களையும் பகிர்ந்துகொண்டார்.
டாட்டியானா தனது பதிவில், 'மார்ச் மாதம் என் வாழ்க்கையின் சிறந்த மாதமாக இருந்திருக்கலாம். நாங்கள் ஒரு மாதமாக இந்நாட்டில் இருக்கிறோம், Auberonஐ கவனித்துக் கொள்வது மிகவும் அருமையாக இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், குடும்பம் லண்டனுக்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர் கூறினார்.