பெண்கள் மட்டுமே பயணித்த ராக்கெட் பயணம் வெற்றி - சில சுவாரஸ்ய காட்சிகள்
60 ஆண்டுகளில் முதன்முறையாக பெண்கள் மட்டுமே விண்வெளிக்குப் பயணித்த ராக்கெட் பயணம் வெற்றியடைந்துள்ளது.
பெண்கள் மட்டுமே பயணித்த ராக்கெட் பயணம் வெற்றி
பொப்பிசைப் பாடகி கேற்றி பெரி, உலக கோடீஸ்வரர் ஜெஃப் பெசோஸின் காதலியும், எழுத்தாளருமான லாரன் சான்ச்சேஸ் உட்பட ஆறு பெண் பிரபலங்களும் விண்வெளிக்குச் சென்று மீண்டும் பத்திரமாக பூமியில் தரையிறங்கியுள்ளார்கள்.
விண்வெளியின் எல்லை என கருதப்படும் Karman line என்னும் இடத்தைத் தொட்டதும், அனைவரும் மிதக்கத் துவங்க, அந்த நான்கு நிமிடங்களை உற்சாகக் கூச்சலிட்டுக் கொண்டாடினார்கள் ஆறு பேரும்.
விண்வெளியிலிருந்து மீண்டும் பூமிக்கு புறப்படும்போது, ’What a Wonderful World’ என்னும் பாடலை பாடத் துவங்கியுள்ளார் பாடகி கேற்றி பெர்ரி.
அவர்கள் பயணித்த கேப்சூல் மூன்று பாராசூட்கள் உதவியுடன் பத்திரமாக பூமியில் இறங்க, விண்வெளிக்குச் சென்று பூமிக்குத் திரும்பிய மகிழ்ச்சியை, பூமியை முத்தமிட்டு வெளிப்படுத்தினார் பெர்ரி.
வரலாற்றின் இடம்பெற்றுவிட்ட இந்த சம்பவம், நீண்ட காலத்துக்கு அந்தப் பெண்களின் மனதில் இனிய நினைவுகளாய் நீடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.























