• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலக கடவுச்சீட்டு மதிப்பீட்டில் இலங்கை 3 இடங்கள் முன்னேற்றம்

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கை மூன்று இடங்கள் முன்னேறியுள்ளது.

இலங்கை, உலக கடவுச்சீட்டு வலிமை குறியீட்டு பட்டியலில் 2025-ஆம் ஆண்டில் மூன்று இடங்கள் முன்னேறி 171வது இடத்திலிருந்து 168-வது இடத்திற்கு சென்றுள்ளது.

இந்தத் தகவல், துபாயை தலைமையிடமாகக் கொண்ட Nomad Capitalist நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலிருந்து வெளியாகியுள்ளது.

Sri Lanka Passport, global passport strength index, இலங்கை கடவுச்சீட்டு

இந்த பட்டியல், பாஸ்போர்ட் வலிமையை பின்வரும் ஐந்து அடிப்படைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்கிறது:

விசா இல்லா பயண சுதந்திரம்
வரி கொள்கை
உலக அளவிலான மதிப்பீடு
இரட்டை குடியுரிமை வாய்ப்பு
தனிப்பட்ட சுதந்திரம்

இலங்கையின் மொத்த மதிப்பெண் 43.5 ஆகும். தற்போதைய நிலையில், இலங்கை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 57 நாடுகளுக்குத் விசா இல்லாமல் அல்லது Visa-On-Arrival, அல்லது மின்னணு விசாவுடன் பயணிக்க முடிகிறது.

உலக மதிப்பீட்டு பிரிவில் இலங்கை 30 மதிப்பெண் பெற்றுள்ளது. இது, பல இடங்களில் இலங்கை பயணிகள் நேரிடும் ஏராளமான எதிர்மறையான அணுகுமுறையை குறிக்கிறது.

தனிப்பட்ட சுதந்திரத்தில் இலங்கை வெறும் 20 மதிப்பெண்களையே பெற்றுள்ளது. இது மிகவும் குறைவான குடிமக்கள் சுதந்திரத்தை உணர்த்துகிறது.

உலகின் மிகமுக்கியமான பாஸ்போர்ட் பட்டியலில் இலங்கை சிறிய முன்னேற்றம் கண்டாலும், தனது பிராந்தியத் தொடர்பு நாடுகளைவிட பின்னே தான் உள்ளது.

தெற்காசிய நாடுகளின் வரிசையில், மாலத்தீவு 65.5 மதிப்பெண்களுடன் 104-வது இடத்திலும், புடான் 140-வது இடத்திலும் உள்ளது.

இந்தியா 148வது இடத்தில் (47.5), நேபாளம் 180-வது இடத்தில், பங்களாதேஷ் 181-வது இடத்தில் உள்ளன. 
 

Leave a Reply