ட்ரம்பிற்கு ஜனாதிபதியாக பணியாற்ற உடற்தகுதி இருக்கிறதா? வெளியான மருத்துவ பரிசோதனை அறிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப், தமது பல்வேறு நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் பரபரப்பான தலைவராக இருக்கிறார்.
சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு வரி விதிப்புகளை அறிவித்த ட்ரம்ப், அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் 30 நாட்களுக்குள் மேல் தங்கினால், அவர்கள் அரசிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும் புதிய விதியை அறிமுகப்படுத்தினார்.
இந்த நிலையில் டொனால்ட் ட்ரம்பிற்கு (Donald Trump) உடற்தகுதி பரிசோதனை நடைபெற்றுள்ளது. அதன் முடிவுகளை வெள்ளை மாளிகை அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
அதில், ட்ரம்ப் தலைமை தளபதியாக மற்றும் நாட்டின் தலைவராக பணிகளை மேற்கொள்ள முழு அளவில் தகுதி வாய்ந்தவராக இருக்கிறார். எனினும் 2020யில் இருந்த அவரது உடல் எடையில் 20 பவுண்டுகள் வரை குறைந்துள்ளது.
மேலும் இருதய, நரம்பு மற்றும் பொதுவான உடல் இயக்கம் என்ற அளவில் தொடர்ந்து சிறந்த ஆரோக்கியத்துடன் அவர் இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது.























