• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒன்ராறியோ சட்டசபையின் முதல் பெண் சபாநாயகர் யார்

கனடா

ஒன்ராறியோ சட்டசபையில் இன்றைய தினம் வரலாற்று சாதனை படைக்கப்பட உள்ளது.

மாகாணத்தின் முதல் பெண் சபாநாயகரை தேர்வு செய்யும் பணிக்கு உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர்.

கடந்த ஏழு ஆண்டுகளாக சட்டசபையை வழிநடத்தி வந்த டெட் ஆர்னட் ஓய்வு பெறுவதனால், புதிய சபாநாயகர் தேர்வு இந்த அமர்வின் முதன்மை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிக்காக இரண்டு உறுப்பினர்கள் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளும் புரோகிரெஸிவ் கன்சர்வேட்டிவ் கட்சியின் டொன்னா ஸ்கெல்லி மற்றும் நியூ டெமோகிராடிக் கட்சியின் ஜெனிபர் பிரெஞ்ச் ஆகியோர் சபாநாயகர் பதவிக்காக போட்டியிடுகின்றனர். 
 

Leave a Reply