• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Madras Matinee படத்தின் டைட்டில் ஸ்டோரி வீடியோ ரிலீஸ்

சினிமா

அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில் படத்தின் டைடில் ஸ்டோரி வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சத்யராஜ் ஒரு புனைவு எழுத்தாளராக இருக்கிறார். இவர் சை ஃபை கதை எழுதி வருகிறார். அவரது உறையாடலில் தான் வீடியோ தொடங்குகிறது. ஒரு மிடில் கிளாஸ் மனிதனின் வாழ்க்கையில் சந்தோஷம் மற்றும் சுவாரசியம் எங்கே இருக்கிறது என்ற கேள்வியுடன் அந்த வீடியோ முடிகிறது. திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தின் ஒளிப்பதிவை ஆனந்த் ஜி கே, இசை கே சி பாலசரங்கன், படத்தொகுப்பு சதீஷ் குமார், கலை வடிவத்தை ஜாக்கி மேற்கொள்கின்றனர்.
 

Leave a Reply