ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல் - யுக்ரேனில் அமைதியை எட்ட முடியாத நிலை
ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக யுக்ரேனில் அமைதியை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பியப் பாதுகாப்பு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
யுக்ரேனின் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா மற்றும் மொஸ்கோவுடனான பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, யுக்ரேன் குறித்து ரஷ்ய ஜனாதிபதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்காவின் விசேடத் தூதுவர் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்றும் நடைபெறவுள்ளது.
யுக்ரேனின் போர் நிறுத்தம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட உள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.























