• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவராஜ்குமாரின் மகள் தயாரித்த Firefly படத்தின் டிரெய்லர் வெளியீடு

சினிமா

கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாரின் மகள் நிவேதிதா சிவராஜ்குமார் ஆவார். இவரது மகள் தற்பொழுது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் கன்னடத்தில் Firefly என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநரான வம்ஷி கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் தூங்க முடியாமல் கஷ்ட படும் கதாநாயகன் வாழ்க்கையில் மிகவும் குழப்பம் நிறைந்த மனநிலையில் இருக்கும் கதாநாயகனின் காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது.

டிரெய்லர் காட்சி முடிவடையும் போது சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் பீசா டெலிவரி பாயாக வருவது டிரெய்லரின் ஹைலைட்டாக அமைந்துள்ளது. இதில் அவர் கவுரவ் வேடத்தில் நடித்ததை குறித்து "நான் என் மகள் தயாரிக்கும் முதல் படமான Firefly படத்தில் நடிப்பது மிகவும் ஸ்பெஷலாக இருக்கிறது" என கூறியுள்ளார்.

படத்தின் கதாநாயகனாக வம்ஷி நடிக்க அவருடன் அச்யுத் குமார், சுதா ராணி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் இசையை பிரபல இசையமைப்பாளரான சரண் ராஜ் இசையமைத்துள்ளார்.

டிரெய்லர் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. திரைப்படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply