• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீண்டும் வெளியாகும் சச்சின் பட ட்ரெய்லர்- ரசிகர்களுக்கு நாளை ட்ரீட்

சினிமா

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

இந்த வரிசையில் விஜய்யின் 'கில்லி' படமும் திரையிடப்பட்டது. அதனை தொடர்ந்து விஜய் நடித்த 'சச்சின்' படத்தையும் டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் திரைக்கு கொண்டு வர பணிகள் நடைபெற்று வந்தன. இதனை தொடர்ந்து ரசிகர்களால் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 'சச்சின்' படம் வருகிற 18-ந்தேதி மீண்டும் வெளியாக உள்ளது. இதை அடுத்து இப்படத்தின் 'வா வா வா என் தலைவா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது.

இந்த நிலையில், 'சச்சின்' திரைப்படம் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார்.

'சச்சின்' படம் 2005-ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் திரைக்கு வந்தது. இதில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்து இருந்தார். இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் டைரக்டு செய்ய, கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார்.
 

Leave a Reply