• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உயிருள்ள 6000 பேரை இறந்தவர்களாக அறிவித்த அமெரிக்க அரசு.. 

சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வரும் சூழலில் உயிருள்ள 6000 பேரை இறந்தவர்களாக டிரம்ப் அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் அவர்களின் சமூக பாதுகாப்பு எண்கள் ரத்து செய்யப்பட்டது. எனவே அவர்கள் தாமாகவே அமெரிக்காவை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை.

தற்போது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட வெவ்வேறு நாட்டை சேர்ந்த 6,000 க்கும் மேற்பட்ட உயிருள்ள குடியேறிகள், முன்னாள் அதிபர் ஜோ பைடனால் தொடங்கப்பட்ட திட்டங்களின் கீழ் தற்காலிகமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்கள். தற்போது அவர்கள் அனைவரும் குறிவைக்கப்படுகிறார்கள்.

இறந்தவர்களாக கருதப்பட்டு அவர்களின் சமூகப் பாதுகாப்பு எண்களை ரத்து செய்யப்பட்டதால் அவர்களால் அமெரிக்காவில் வேலை செய்யவோ அல்லது சலுகைகளைப் பெறவோ முடியாது.

சமூக பாதுகாப்பு எண் என்றால் என்ன?

இவை அமெரிக்க குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் தற்காலிக வேலை செய்யும் குடியிருப்பாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தனித்துவமான ஒன்பது இலக்க எண்களாகும்.

இந்த எண்கள் வருமானம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உட்பட பல அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

குடியேறிகளுக்கு பைடன் நிர்வாகத்தால் இந்த சட்டப்பூர்வமாக சமூக பாதுகாப்பு எண்கள் வழங்கப்பட்டன. ஆனால் இப்போது டிரம்ப் நிர்வாகம் இந்த குடியேறிகளின் சமூகப் பாதுகாப்பு எண்களை பறிப்பதன் மூலமும், வங்கிகள் அல்லது பிற அடிப்படை சேவைகளைப் பயன்படுத்துவதை கடினமாக்குவதன் மூலமும் அவர்கள் தாமாக நாட்டை விட்டு வெளியேற அழுத்தம் ஏற்பட்டுள்ளது . 
 

Leave a Reply