• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டொராண்டோவில் வார இறுதி நாட்களில் காலநிலையில் மாற்றம்

கனடா

ரொராண்டோவில் இன்றைய தினம் காலை பனித்துளிகளுடனான வானிலை காணப்பட்டது.

எனினும் வார இறுதியில் வெயிலுடனும் ஓரளவு வெப்பநிலையுடைய வானிலை காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இடைவிடாத மழை மற்றும் பனித்துளிகளை ஏற்படுத்திய மேகங்கள், சனிக்கிழமை காலை முடிவில் காணாமல் போய், வெயிலுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நாளில் அதிகபட்ச வெப்பநிலை 11°C வரை பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழுக்க வெயிலுடனும், அதிகபட்ச வெப்பநிலை 14°C வரை உயர வாய்ப்பு உள்ளது.

இருப்பினும், வாரத்தின் தொடக்கத்தில் மோசமான வானிலை மீண்டும் திரும்பும் சாத்தியம் உள்ளது.

திங்கள் முதல் புதன் வரை மழை அல்லது பனித்துளிகள் வரக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது, அதனுடன் வெப்பநிலை மீண்டும் குறையலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. 
 

Leave a Reply