தமிழ் புத்தாண்டு 2025 ஏப்ரல் 14 திங்கள் கிழமை கொண்டாடப்படும்.என்பதை மறந்து விடாதீர்கள்
சினிமா
இப்படியும் சந்தேகங்களும் குழப்பங்களும் உங்களுக்கு ஏற்படுவது இயல்பு .வாக்கிய பஞ்சாங்கம் அல்லது திருக்கணித பஞ்சாங்கம் எது சரி என்பதே அது
எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்திய நிகண்டுகளில், ஆவணியே முதல் மாதம் என்ற குறிப்பைக் காணமுடிகின்றது. பொ.பி பதினான்காம் நூற்றாண்டில் தொல்காப்பியத்துக்கு உரைவகுக்கும் நச்சினார்க்கினியரும் ஆவணியே முதல் மாதம் என்கின்றார்.
ஆவணி முதல் மாதம் என்பது கணிப்பில் பயன்பட்டாலும், அதன் போது புத்தாண்டு என்று பண்டிகை கொண்டாடப்பட்டதா? என்றால் இல்லை
தமிழ் நாட்காட்டி இராசிச் சக்கரத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு சூரிய நாட்காட்டி என்பதால், பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேழத்தில் சூரியன் நுழையும் சித்திரையே முதல் மாதமாகக் கருதப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.
ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும். சூரிய மேச இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது. ஆங்கில கிரெகொரிய நாட்காட்டியில் பெரும்பாலும் ஏப்ரல் 14 தொடங்கும் தமிழ் ஆண்டு சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 நாட்களில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில (கிரகோரியன்) நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை என்பதே.
நடைமுறைக்கு ஏற்றதாக தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது.
இலங்கையில் புத்தாண்டு பிறக்கும் விசூ புண்ணியக் காலத்தில், ஆலயத்தில் வழங்கப்படும் மருத்து நீர் எனப்படும் மூலிகைக் கலவையை இளையவர்களின் தலையில் மூத்தோர் வைத்து ஆசீர்வதிப்பர். அதன்பின்னர் நீராடி அவர்களிடம் ஆசி பெற்று, குறித்த சுபவேளைகளில் கைவிசேடம் அல்லது கைமுழுத்தம் பெறுவர். மூத்தவர்களால் இளையவர்களுக்கு, புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கப்படும் பணமே கைவிசேடம் எனப்படுகிறது. போர்த்தேங்காய் உடைத்தல், வழுக்கு மரம் ஏறல், யானைக்குக் கண் வைத்தல், கிளித்தட்டு, ஊஞ்சலாடல், முட்டி உடைத்தல், வசந்தனாட்டம், மகிடிக்கூத்து, நாட்டுக்கூத்து என்று
பாரம்பரிய புத்தாண்டுக் கலை யாக மிளிர்ந்த காலங்கள் உண்டு .
இப்போ தண்ணியடிப்பதும் நாடகக் கலை என்ற போர்வையில் எல்லா மீடியாக்களும் மக்களை நாறடித்து தமிழரின் பாரம் பரியங்களையே அழித்து வருவது கண் கூடு
சித்திரை தமிழரின் மரபார்ந்த புத்தாண்டு அல்ல என்ற மாற்றுக்கருத்து தமிழ்நாட்டில் 1970 மற்றும் 1980களில் தோன்றியது. இக்கருத்து வலுப்பெற முக்கிய காரணம், தை முதலாம் தேதியில் துவங்கியதும், தமிழரின் ஆண்டுத் தொடராக முன்வைக்கப்பட்டதுமான திருவள்ளுவர் ஆண்டு, 1981இல் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில், ஆவணங்களில் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதே ஆகும்.
உண்மையில் மறைமலையடிகள் போன்றோரால் வைகாசி அனுடம் என்று நியமிக்கப்பட்ட திருவள்ளுவர் திருநாள் தை இரண்டாம் தேதிக்கு மாற்றப்பட்டதே, திருவள்ளுவர் ஆண்டு தை ஒன்றில் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தது
இதனால் தை முதல்நாள்தான் புத்தாண்டு என்று, திமுக அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 2011இல் இது அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது
1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் கூடிய அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது சங்க இலக்கியங்களில் தை மாதமே புத்தாண்டு என்ற குறிப்பு உள்ளதென்றும், புத்தாண்டன்று பிறப்பதாகச் சொல்லப்படும் அறுபது ஆண்டு வட்டத்தில் எதுவும் தமிழ்ப்பெயர் இல்லையென்றும் இந்தக் கூட்டம் கூறியது .
இதற்கு எதிராக, தை தொடர்பான சங்க இலக்கிய வரிகள் எதுவும் தைமாத நீராட்டு விழாவொன்றைக் குறிப்பிடுகின்றனவே அன்றி, புத்தாண்டைப் பாடவில்லையென்றும், 1921இல் அத்தகைய ஒரு மாபெரும் மாநாடு இடம்பெற்றதற்கான எந்தவொரு ஆவணங்களோ, மாநாட்டு இதழோ, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களோ எதுவுமே பொதுவெளியில் வைக்கப்படவில்லையென்றும்,
என்றும் எதிர்வாதக் கூற்றுகள் எழுந்தன.அதாவது 1921இல் மறைமலையடிகள் இலங்கையில் தைப்பொங்கல்தான் கொண்டாடினார் என்பது தான் உண்மை ஆனால்
தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு தமிழ் மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாக கருதப்படுகிறது. சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14-ஆம் நாள் முதல் மே மாதம் 14-ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும். புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் கொண்டாடப்படுவதும் புது வருடத்தில் இறைவழிபாடு, விருந்தோம்பல், தானதர்மம், ஆசிபெறுதல் என்பவைகளையும் நாம் கடைப்பிடிப்பது வழக்கம்.
சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில் காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும்.
சங்க இலக்கியமான நெடுநல்வாடையில் மேழமே முதல் இராசி என்ற குறிப்பு
காணப்படுவதால், அதை மேலதிக சான்றாகக் கொள்வர். எனினும், பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய அகத்தியர் பன்னீராயிரம், பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புட்பவிதி
முதலான நூல்களே தெளிவாக சித்திரை முதல் மாதம் என்று சொல்கின்றன. பங்குனியின் இறுதிநாட்களில் அல்லது சித்திரை முதல் நாளில் தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும். மலைபடுகடாம் "தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை" என்றும், பழமொழி நானூறு "கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்" என்றும் பாடுவதால் இளவேனில் துவக்கமான சித்திரையே அக்காலத்தில் தலைநாளாக மிளிர்ந்தது என்றும் சொல்கிறார்கள்
இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சித்திரை ஒன்றையே புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். பொ.பி. 1310-ல் இலங்கையை ஆண்ட தம்பதெனியா மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகுவின் அரசகுருவான தேனுவரைப்பெருமாள் எழுதிய "சரசோதி மாலை" எனும் நூலில் வருடப்பிறப்பின் போது செய்யவேண்டிய சடங்குகள் விவரிக்கப்பட்டுள்ளன
இலங்கையின் திருக்கோணேச்சரம், பொ.பி. 1622-ம் ஆண்டு சித்திரை மாதம், தமிழர் புத்தாண்டு அன்று கொள்ளையிடப்பட்டதாக போர்த்துக்கீசர் குறிப்புகள்குறிக்கின்றது
(பொ.பி.என்பது A.D)
சித்திரை புத்தாண்டு 'விசுவாசுவ' வருடம் 14.04.2025 திங்கட்கிழமை அதிகாலை பிறக்கிறது. அதிகாலை 2.29 மணிக்கு புதுவருடம் பிறக்கிறது.
விஷு புண்ணியகாலம் - 13.04.2025 ஞாயிறு இரவு 10.29 மணி முதல் 14.04.2025 திங்கட்கிழமை காலை 6.29 மணி வரை. ( தலைக்கு - ஆலிலை , காலுக்கு -இலவமிலை )
ஆடை நிறம் - சிவப்பு , நீலம்
கைவிஷேட நேரங்கள் - 14.04.2025 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணி வரையும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும்.
ஆதாய விடயம்
மேஷம் - 2 வரவு 14 செலவு
இடபம் - 11 வரவு 5 செலவு
மிதுனம் - 14 வரவு 2 செலவு
கடகம் - 14 வரவு 8 செலவு
சிம்மம் - 11 வரவு 11 செலவு
கன்னி - 14 வரவு 2 செலவு
துலாம் - 11 வரவு 5 செலவு
விருச்சிகம் - 2 வரவு 14 செலவு
தனுசு - 5 வரவு 5 செலவு
மகரம் - 8 வரவு 14 செலவு
கும்பம் - 8 வரவு 14 செலவு
மீனம் - 5 வரவு 5 செலவு
தோஷ நட்சத்திரங்கள்
திருவாதிரை, சித்திரை, சுவாதி, விசாகம், சதயம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களை கொண்டோர் தவறாமல் மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து, தான, தர்மம் செய்து, சங்கிரம தோஷ நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.
என்று பல அறிவித்தல்கள் வருகின்றன .இது எவ்வளவு தூரம் உண்மை என்பது புரியாத நிலைக்கு மானுடம் தள்ளப்பட்டு நிற்கிறது .
பஞ்சாங்கம் என்பது கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய புத்தகம் என்றும் வானியல் நூல் என்றும் குறிப்பிடப்படுகின்றது. நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகள் தங்கள் ஞானத்தால் சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கணித்து அளித்ததே பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் என்ற பெயர்
வாரம்
திதி
கரணம்
நட்சத்திரம்
யோகம் என்னும் ஐந்து அங்கங்களைக் கொண்டதால் பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம்
எனப்படுகிறது வாரம் என்பது ஏழு கிழமைகள் ஆகும். இவை:
ஞாயிற்றுக்கிழமை
திங்கட்கிழமை
செவ்வாய்க்கிழமை
புதன்கிழமை
வியாழக்கிழமை
வெள்ளிக்கிழமை
சனிக்கிழமை ஆகும்
திதி என்பது சந்திரனின் பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப் பாதையின் 30 சம கோணப் பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்க எடுக்கும் காலத்தைக் குறிக்கும். அமாவாசையில் இருந்து வரையான வளர்பிறைக் காலத்தில் 15 திதிகளும், பூரணை தொடக்கம் மீண்டும் அமாவாசை வரும் வரையான காலத்தில் இன்னும் 15 திதிகளும் வருகின்றன. முதற் தொகுதி சுக்கில பட்சத் திதிகள் எனவும், இரண்டாம் தொகுதி கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும். இவ்விரு தொகுதிகளில் வரும் திதிகளும் ஒரே பெயர்களையே கொண்டிருக்கின்றன. சுக்கில பட்சத்தில் வரும் 14 திதிப் பெயர்களே கிருஷ்ண பட்சத்திலும் வருகின்றன, அதன் 30 பெயர்களும் இவ்வாறு கூறப்படும் .
1. அமாவாசை
2. பிரதமை 17. பிரதமை
3. துதியை 18. துதியை
4. திருதியை 19. திருதியை
5. சதுர்த்தி 20. சதுர்த்தி
6. பஞ்சமி 21. பஞ்சமி
7. சஷ்டி 22. சஷ்டி
8. சப்தமி 23. சப்தமி
9. அட்டமி 24. அட்டமி
10. நவமி 25. நவமி
11. தசமி 26. தசமி
12. ஏகாதசி 27. ஏகாதசி
13. துவாதசி 28. துவாதசி
14. திரயோதசி 29. திரயோதசி
15. சதுர்த்தசி 30. சதுர்த்தசி
கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும். திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு. ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர்
வைக்கப்பட்டுள்ளது .
பவம்
பாலவம்
கௌலவம்
சைதுளை
கரசை
வனசை
பத்திரை
சகுனி
சதுஷ்பாதம்
நாகவம்
கிமிஸ்துக்கினம்
என்று கரணப் பெயர் கள் உண்டு
நட்சத்திரம்
%%%%%
ராசிச் சக்கரத்தை ஒவ்வொன்றும் 13.33 பாகை அளவு கொண்ட 27 பகுதிகளைக் குறிக்கும். சந்திரன் பூமியைச் சுற்றிவரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரம் அந்த நேரத்தில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களும் பின்வருமாறு:
1. அச்சுவினி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோகிணி
5. மிருகசீரிடம்
6. திருவாதிரை
7. புனர்பூசம்
8. பூசம்
9. ஆயிலியம்
10. மகம்
11. பூரம், 12. உத்தரம்,13. அத்தம்,14. சித்திரை,15. சுவாதி, ,16. விசாகம்,17. அனுஷம்,18. கேட்டை,19. மூலம்
20. பூராடம்,21. உத்திராடம்
,22. திருவோணம்
23. அவிட்டம்,,24. சதயம்,25. பூரட்டாதி,26. உத்திரட்டாதி,27. ரேவதி
,சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப்பகுதி யோகம் எனப்படும். எனவே 27 நட்சத்திரங்களையும் கடக்கும் காலப்பதிகளுக்கு 27 பெயர்களைக் கொடுத்துள்ளனர். இவற்றை யோகம் என்பர்.
யோகம் என்பது, சூரியன், சந்திரன் என்பவற்றின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை 13° 20' அளவால் அதிகரிப்பதற்கான காலப் பகுதியைக் குறிக்கும்.
முழுச் சுற்றான 360° யில் 13° 20' அளவு கொண்ட 27 யோகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியான பெயர்களையும் பெற்றுள்ளன. இந்த யோகத்தைத் "தின யோகம்", "நித்திய யோகம்", "சூரிய சித்தாந்த யோகம்" போன்ற பெயர்களாலும் அழைப்பது உண்டு. ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் ஆகும். ஒருவருடைய பிறந்த யோகம் அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கு உதவும் என்கிறது , சோதிடம்.
ஜோதிடத்தில் 3500 க்கும் மேற்பட்ட யோகங்கள் உள்ளன. யோகங்கள் இல்லாத ஒரு ஜாதகம் கூட பார்க்க இயலாது இந்த பூமியில்….
ஜோதிடம் உண்மைதான். ஆனால் அதை சரியாக கணக்கிட்டுச் சொல்லும் திறமைசாலிகள் குறைந்துவிட்டனர்.
பஞ்சாங்களில் வருடம் மற்றும் மாதங்கள் இரண்டு முற்றிலும் வேறுபட்ட முறைப்படி கணக்கிடப்படுகின்றன. 1 சௌரமான முறை ,2 சந்திரமான முறை
ஞாயிறு இயக்கம் தொடங்குவது மேஷ ராசியின் முதல் நட்சத்திரத்திரமான அஸ்வினியில் பிரவேசிக்கும் காலம் முடிவது மீனராசியின் கடைசி நட்சத்திரமான ரேவதி. தொடக்கம் மற்றும் முடிவு ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட காலம் வருடம் ஆகும் (Sidereal revolution of Earth round the Sun). ஒவ்வொரு இராசியிலும் சஞ்சரிக்கும் காலம் (சித்திரை முதல் பங்குனி வரை சௌர மாதம் ஆகும். சௌரமான முறையில் ஓராண்டு என்பது சராசரியாக 365 நாள், 15 நாடி, 23 வினாடிகளைக் கொண்டதாகும்.
சூரியன் மேஷாயன விஷூவத்தில் பிரவேசித்து திரும்ப மேஷாயன விஷூவத்தை வந்தடையும் காலம சாயன வருஷம் என்று அழைக்கப்படுகிறது. (Tropical revolution of Earth round the சன்). சாயன வருஷம் என்பது 365 நாள், 14 நாடி, 32 வினாடிகளைக் கொண்டதாகும்.
சந்திரனின் இயக்கத்தை அடைப்படையாகக் கொண்டு கணக்கிடும் முறை. சௌரமான முறை வருடப் பிறப்பிற்கு முன்பு வரும் பூர்வபக்ஷ பிரதமை திதி தொடங்கி அடுத்த சௌரமான முறை வருடப் பிறப்பிற்கு முன் வரும் அமாவாசை முடியவுள்ள ஒரு ஆண்டு காலத்தைக் குறிப்பது சந்திரமான முறை எனப்படும். இம்முறையில் ஓராண்டு என்பது சுமார் 354 நாட்கள் கொண்டது. பூர்வப்க்ஷ பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள சைத்திரம் முதல் பாற்குண்ம் வரையான 12 காலப் பிரிவுகள் சந்திர மாதங்களாகும்.
திருவள்ளுவர் ஆண்டு
திருவள்ளுவர் பிறந்த காலத்தை ஒட்டி தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்படுகிறது
சாலிவாகன வருஷம் அல்லது சக வருஷம் என்ற பெயர்களில் கடைப்பிடிக்கும் பஞ்சாங்க முறை. ஆண்டு என்பது மார்ச்சு மாதம் 22 ஆம் தேதி முதல் அடுத்த மார்ச்சு மாதம் 23 ஆம் தேதி வரை.ஆகும்
பசலி வருஷ பஞ்சாங்கம்:
வட இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஆண்டுக் கணக்கு. முகலாயர் காலத்தில் அரசாங்க வரவு செலவுக் கணக்குகளை நிர்வகிக்க ஏதுவாகத் தோற்றுவிக்கப்பட்டது.
கலியுகாப்தம் பஞ்சாங்கம்
கலியுகம் தோன்றிய நாள் முதல் கணக்கிட்டு வரப்படுகிறது.
விக்கிரம வருஷம்
மகா வீரர் வருஷம்
என்று குழப்பங்கள் நீடிக்கின்றன .நீங்கள் குழம்பாதீர்கள் .கடவுள் உண்டு மார்ர்க்கமும் உண்டு .
நீங்கள் செல்வது உங்கள் வாழ்க்கை .நாளை என்பது இறைவனின் கையில் .
எதற்கு சோதிடம் ?
முழுமையாக சோதிடத்தை கற்று உணர்ந்தவர்கள் மறைந்து விட்டார்கள் .
இப்போது போலிகள் தான் பிழைப்புக்காக உங்களை மூளைச் சலவை செய்கிறார்கள் ..
தீர்வு உங்களிடமே .
சாத்திரம் என்பது உண்மை .ஆனால் அதைக் கற்றறிந்த விற்பன்னர்கள் நம்மிடம் இப்போ இல்லை
பஞ்சாங்கத்தில் இரு வகைகள் உள்ளன. 1. திருக்கணித பஞ்சாங்கம் 2. வாக்கிய பஞ்சாங்கம். வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிசம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். அமாவாசை, பௌர்ணமி தினங்களில் இந்த வேறுபாடு மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமி, நவமி தினங்களில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கும். தமிழக இலங்கைக் கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது.
சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும். அனைத்து கிரகங்களும் தங்களுக்கு உள்ள இழுப்பு விசையால் சந்திரனைத் தங்களை நோக்கி இழுக்கின்றன. சந்திரனுக்கு ஈர்ப்பு விசை குறைவென்பதால் மற்ற கிரகங்கள் அதனை இழுப்பதால் சந்திரன் வட்டப்பாதையில் அவ்வப்போது வேறுபாடு ஏற்படுவதுண்டு. திருத்தப்பட்ட பஞ்சாங்கமாக திருக்கணித பஞ்சாங்கம் வெளிவருகிறது. திருக்கணிதப் பஞ்சாங்கங்கள்: ஸ்ரீனிவாசன் திருக்கணிதப் பஞ்சாங்கம், வாசன் சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம், ஆதவன் திருக்கணிதப் பஞ்சாங்கம், குமரன் திருக்கணித பஞ்சாங்கம், பாலன் திருக்கணித பஞ்சாங்கம், ராஷ்ட்ரீய பஞ்சாங்கம், சபரி சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம்.
என்று கணக்குகள் உண்டு .இது குழப்பமே அன்றித் தெளிவற்றது .நாளை நீங்களும் உங்கள் அறிவுக்கு எட்டியபடி இன்னொரு திருக்கணித பஞ்சாங்கத்தை உருவாக்குவீர்கள் .
இந்தத் திருக்கநிதபஞ்சாங்கத்தை நம்பி கணனியில் ஏற்றி மக்களை சிதறடித்து வருகிறாகள் .
இதனால் கலியாணங்கள் குழப்பம் .பிறப்புச் சாதகக் குழப்பம் என்று கன்னி காரும் ஆடவரும் திருமணமின்றி தவிக்கிறார்கள் .முன்பு எல்லாம் ஒரு சாதகம் .இப்போ பலருக்கு பல ஜாதகம் .
உங்களின் குழப்பத்தை தீர்க்க வாக்கிய பஞ்சாங்கத்தை நம்புங்கள்
முன்னர் ரிசிகள் ஒன்று கூடி அருளி செய்த சுலோகங்களில் உள்ள கணித முறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் எழுதப்படும் பஞ்சாங்கமாகும். திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது. வாக்கியம் என்பது கணிதத்தில் மாறுதல் செய்யாமல் பழமையை அப்படியே பிரதிபலிப்பதாகும்.
தமிழ் நாட்டில் வாக்கியப் பஞ்சாங்கம் அதிகமாக பின்பற்றப்படுகிறது. தமிழ் நாட்டில பற்பல வாக்கியப் பஞ்சாங்கங்கள் வெளியிடப்படுகின்றன: ஆற்காடு ஸ்ரீ சீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம், திருநெல்வேலி வாக்ய பஞ்சாங்கம், ராமநாதபுரம் வாக்கியப் பஞ்சாங்கம், 28-ஆம் நம்பர் பாம்புப் பஞ்சாங்கம், சிருங்கேரி மடம் பஞ்சாங்கம், ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம், ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தான வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கோயில் அனுஷ்டான பஞ்சாங்கம் என்பவை
இலங்கையில் இரகுநாத அய்யர் வாக்கிய பஞ்சாங்கம்
கட்டுரை நீள்வதால் இன்னொரு பகுதியில் சந்திப்போம்
Manikkavasagar Vaitialingam






















