அட்டப்பாடியில் அட்டகாசமாக நடக்கும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு
சினிமா
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், வசூலிலும் பல கோடிகளை குவித்தது. இந்த நிலையில், ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு சமீபத்தில் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்தனர்.
தற்பொழுது படப்பிடிப்பு கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது. நேற்று ரஜினிகாந்த் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். மேலும் இன்று கேரளாவில் உள்ள அட்டப்பாடி மலைதொடரில் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இதனை அப்படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடிக்கும் மிர்னா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஜெயிலர் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு வீடியோவாக வெளியிடப்பட்டது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.






















