• Welcome to TamilsGuide
செய்திகள் 1

78வது Cannes திரைப்பட விழா - ஜான்வி கபூரின் Homebound திரைப்படம் தேர்வு

இலங்கை

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்த ஹோம்பவுண்ட் திரைப்படம் 78வது கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

நீரஜ் கய்வான் எழுதி இயக்கிய இப்படத்தில் ஜான்வி கபூருடன், இஷான் கட்டர், விஷால் ஜெத்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் 'Un Certain Regard' பிரிவில் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக ஹோம்பவுண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்காருக்கு அடுத்தபடியாக உலக பிரசித்தி பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் வருகிற மே 13 முதல் மே 24 வரை இந்த கேன்ஸ் திரைப்பட விழா நடைபெறுகிறது.

வெஸ் ஆண்டர்சென், ரிச்சர்ட் லிண்ட்கேர், அரி அஸ்டர் உள்ளிட்ட பிரபல இயக்குனர்களின் திரைப்படங்களும் இந்த வருட திரையிடலுக்கு தேர்வாகி உள்ளது.

முன்னதாக ஹோம்பவுண்ட் இயக்குனர் கய்வான் இயக்கிய முதல் படமான மாசான் திரைப்படம் 2015 கேன்ஸ் விழாவில் தேர்வானது. இதில் விக்கி கௌஷல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
 

Leave a Reply