• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

இலங்கை

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜங்க அமைச்சர் பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பல விடயங்கள் தெரியவந்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால நேற்று சபையில் தெரிவித்தார்.

படலந்த வதைமுகாம் தொடர்பான விசாரணை அறிக்கை மீதான நேற்றைய விவாதத்தின்போதே அவர் இத் தகவல்களை வழங்கினார்.

இதன்போது குறித்த தாக்குதலுக்கும் பிள்ளையானுக்கும்  தொடர்பு உள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த விசாரணையை தாம் ஒருபோதும் மூடி மறைக்கப் போவதில்லை எனவும், இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தாம் முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேயபால மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply