• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அட்லி படத்தின் போஸ்டர் கூட காப்பியா? - விமர்சிக்கும் நெட்டிசன்கள்

சினிமா

தமிழில் வெளியான 'ராஜா ராணி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. இவர் கடைசியாக இயக்கிய 'ஜவான்' திரைப்படம் உலகளவில் ரூ. 1,100 கோடியை கடந்து அசத்தியது.

இந்த நிலையில், இயக்குநர் அட்லி அடுத்து இயக்கும் படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜுன் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் அட்லீ இயக்கிய மெர்சல், பிகில் மற்றும் ஜவான் திரைப்படங்களில் இரு வேடங்களில் கதாநாயகர்கள் நடித்து இருப்பனர். அந்த வகையில் இப்படமும் அமையவுள்ளது.

இப்படம் ஒரு பேரலல் யூனிவர்ஸ் ஆக்ஷன் எண்டர்டெயினர் கதைக்களத்தில் உருவாக உள்ளது. அல்லு அர்ஜுனின் 22 படத்தையும், அட்லியின் 6-வது படத்தையும் குறிக்கும் வகையில் #AA22xA6 என்ற ஹஸ்டேக்குடன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டிருந்தது.

இந்த போஸ்டர் பிரபல ஹாலிவுட் படமான டூன் படத்தின் போஸ்டர் போலவே உள்ளது என்று இணையத்தில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

அட்லி படம் என்றாலே அது பல படங்களின் காப்பியாக தான் இருக்கும் என்று நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில், அவருடைய புதிய படத்தின் போஸ்டரும் காப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது.
 

Leave a Reply