• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தாழிறங்கிய காலி கோட்டைக்கு அருகிலுள்ள வீதி

இலங்கை

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான வரலாற்றுச் சிறப்புமிக்க காலி கோட்டையின் மதில் சுவருக்கு அருகிலுள்ள வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது.

சுமார் ஐந்து அடி விட்டம் கொண்ட பத்து அடி பகுதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் விளைவாக, தாழிறங்கிய வீதியின் பகுதியை பகுதியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த இடத்தில் முன்பு தாழிறங்கள் அறிகுறிகள் இருந்ததாகவும், இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

Leave a Reply