• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒன்றாரியோ வர்த்தகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

கனடா

ஒன்ராறியோ மாகாணத்தில் வர்த்தக நடவடிக்கைகளை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் சில வரிச் சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட "நடவடிக்கைகளினால் ஏற்பட்ட நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில், சில மாநில வரிகளை ஆறு மாதங்களுக்கு தள்ளிவைக்கும் தீர்மானத்தை ஒன்ராறியோ அரசு அறிவித்துள்ளது.

சில மாநில நிர்வாக வரிகள் — பீர், வைன் மற்றும் மதுபான வரி, பெட்ரோல் வரி ஆகியவை — 2025 ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 1 வரை அறவீடு செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது நிறுவனங்களுக்கு சுமார் $9 பில்லியன் வரை பணப்புழக்க நிவாரணம் அளிக்கும். இது நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்,” என முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

“இது நிறுவனங்களுக்கு ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா கடனாக இருக்கும்,” என நிதி அமைச்சர் பீட்டர் பெத்லென்பால்வி கூறியுள்ளார். 
 

Leave a Reply