• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமன்னாவின் ஒடேலா 2 படத்தின் டிரெய்லர் வெளியானது

சினிமா

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா இந்திப் படங்களிலும் தொடர்ந்து நடிக்கிறார்.

தமன்னா தற்போது ஒடேலா 2 என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ஒடேலா 2 படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது . இப்படம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரெய்லரில் இடம் பெற்றுள்ள ''நாம் நிற்பதற்கு தேவை பூமிமாதா, நாம் வாழ்வதற்கு தேவை கோமாதா; இதில் நீங்கள் வாழ கோமாதாவை கொல்ல வேண்டும் என்றில்லை, அதன் சிறுநீரை விற்றுகூட வாழலாம்" என்ற வசனம் பேசுபொருளாகியுள்ளது.

ஒடேலா 2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டை முன்னிட்டு மும்பையில் உள்ள பாபுல்நாத் சிவன் கோயிலில் நடிகை தமன்னா சாமி தரிசனம் செய்தார்.
 

Leave a Reply