பூச்சாண்டி காட்டிய டிரம்ப்.. தப்பு மேல தப்பு பண்றீங்க - சீனா கடும் எச்சரிக்கை
இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமரிக்கா புதிய வரிகளை விதித்துள்ளது. இதற்கு எதிர்வினை ஆற்றாமல் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மவுனம் காத்து வரும் சூழலில் சீனா அமெரிக்கா மீது பதிலுக்கு இறக்குமதி பொருட்களுக்கு 34 சதேவீத வரி விதிப்பதாக அறிவித்தது.
வரும் 10 தேதி முதல் இது அமலுக்கு வரும் எனவும் தெரிவித்தது. இதனால் சூடான டிரம்ப், சீனா உடனைடியாக தனது வரியை திரும்பப்பெறவில்லை என்றால் பதிலுக்கு 50 சதவீத வரி விதிப்பேன் என்று மிரட்டினார்.
இந்நிலையில் சீனா பொருட்களுக்கு 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார். இதற்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது.
இது தொடர்பாக சீனாவின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தனது சொந்த உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க உறுதியான எதிர்நடவடிக்கைகளை சீனா எடுக்கும்.
சீனாவுக்கு எதிரான வரிகளை அதிகரிப்பதாக அச்சுறுத்துவதன் மூலம் அமெரிக்கா தவறு மேல் தவறு செய்து வருகிறது. அமெரிக்கா தனது விருப்பப்படி நடக்க வலியுறுத்தினால் சீனா இறுதி வரை போராடும் என்று கூறப்பட்டுள்ளது.






















