• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டிரம்பின் மிரட்டலை தொடர்ந்து சீனாவில் ஹாலிவுட் படங்களுக்கு தடை விதிக்க முடிவு?

இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமரிக்கா புதிய வரிகளை விதித்துள்ளது. இதற்கு எதிர்வினை ஆற்றாமல் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மவுனம் காத்து வரும் சூழலில் சீனா அமெரிக்கா மீது பதிலுக்கு இறக்குமதி பொருட்களுக்கு 34% வரி விதிப்பதாக அறிவித்தது.

வரும் 10 தேதி முதல் இது அமலுக்கு வரும் எனவும் தெரிவித்தது. இதனால் சூடான டிரம்ப், சீனா உடனைடியாக தனது வரியை திரும்பப்பெறவில்லை என்றால் பதிலுக்கு கூடுதலாக 50 சதவீத வரி விதிப்பேன் என்று மிரட்டினார்.

இந்நிலையில், டிரம்பின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவில் ஹாலிவுட் படங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 
 

Leave a Reply