• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அருமையான கேள்விக்கு கவிப்பேரரசின் அற்புதமான பதில்..

சினிமா

உங்கள் இலக்கிய பயணத்தில் எதிர்ப்புகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள்??
கவிப்பேரரசின் அற்புதமான பதில்
தினமணி கதிரில் சுதாங்கன் ஆசிரியராய் இருந்தபோது வள்ளுவர் முதல் வைரமுத்து வரை என்ற ஒரு தொடரை இலக்கிய ஆர்வலர் சிவா எழுதி வந்தார்

தலைப்பை பார்த்ததும் தமிழ்நாட்டின் மூத்த முன்னோடி கவிஞர் ஒருவர் தீப்பிழம்பாய் சினந்து எழுந்தார்.
ஒரு சிறு பத்திரிக்கையில் எதிர்ப்பறிக்கையும் எழுதி வெளியிட்டார் .
யாரோடு யாரை ஒப்பிடுவது வள்ளுவர் கடல்
வைரமுத்து குட்டை என்று முடித்திருந்தார்.
அறிக்கை வந்த அடுத்த வாரம் அதே கவிஞரின் தலைமையில் ஒரு நூல் வெளியீட்டு விழா நானும் அதில் சொற்பொழிவாளர்.
என்ன நடக்குமோ.
ஏது நடக்குமோ என்று மன்றம் முழுக்க ஒரு மயான அமைதி.
நான் எழுந்தேன். ஒலிபெருக்கி முன்னால் 30 நொடிகள் மௌனம் காத்தேன். பிறகு பேசினேன்.
வள்ளுவர் முதல் வைரமுத்து வரை என்று ஒரு தொடர் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதை ஏற்பதோ எதிர்ப்பதோ அவரவர் உரிமை.
அறிக்கை வெளியிடுவது அவரவர் திறமை. ஆனால் அறிக்கையில் பொய் சொல்லக்கூடாது
அறிக்கை வெளியிட்டவர் வைரமுத்து குட்டை என்று முடித்திருக்கிறார்..
நீங்களே சொல்லுங்கள்
நானா? குட்டை .இங்கிருக்கும் கவிஞர்களில் நான் தானே உயரம் என்றேன்.
இருக்குமாய் இருந்த அரங்கம் இன்னிசையாய் சிரித்தது
சில எதிர்ப்புகள் திருத்திக் கொள்ள
பல எதிர்ப்புகள் சிரித்துக் கொள்ள...

 

Leave a Reply