
குருநாகல் எரிவாயு விற்பனை நிலையத்தில் தீ விபத்து-நால்வர் உயிரிழப்பு
இலங்கை
குருநாகல் வெஹெர பிரதேசத்தில் எரிவாயு விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.