• Welcome to TamilsGuide
செய்திகள் 1

One Last Time - மிஷன் இம்பாசிபிள் 8 படத்தின் டிரெய்லர் வெளியானது

சினிமா

சீக்ரட் ஏஜண்டாக டாம் குரூஸ் நடித்து 1996 ஆம் ஆண்டு முதன் முதலில் மிஷன் இம்பாஸிபிள் படம் வெளியானது. முதல்பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து 7-பாகங்கள் வெளியானது. இவை அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன.

கடந்த ஆண்டு ஜூலை இந்த சீரிஸின் 7 பாகம் வெளியானது. அதில் 'ஏஐ தொழில்நுட்பம்' மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், மிஷன் இம்பாஸிபிள் 8ம் பாகத்திற்கான புதிய டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. டீசர் காட்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது முந்தைய பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரி இந்தப் பாகத்தையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாகமே படத்தின் கடைசி பாகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்படம் ஆண்டு மே 23-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. முந்தைய பாகத்தில் ஒரு கீயை தேடி அவர் பயணம் செய்வார். இந்த பாகமும் அதை தேடியே கதைக்களம் அமைந்துள்ளது.
 

Leave a Reply