
இந்தியாவின் பெருமை மிக்க திரைப்படமாக இது இருக்கும் - அட்லீ
சினிமா
தமிழில் வெளியான 'ராஜா ராணி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. இவர் கடைசியாக இயக்கிய 'ஜவான்' திரைப்படம் உலகளவில் ரூ. 1,100 கோடியை கடந்து அசத்தியது.
இந்த நிலையில், இயக்குநர் அட்லி அடுத்து இயக்கும் படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜுன் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் அட்லீ இயக்கிய மெர்சல், பிகில் மற்றும் ஜவான் திரைப்படங்களில் இரு வேடங்களில் கதாநாயகர்கள் நடித்து இருப்பனர். அந்த வகையில் இப்படமும் அமையவுள்ளது.
இப்படம் ஒரு பேரலல் யூனிவர்ஸ் ஆக்ஷன் எண்டர்டெயினர் கதைக்களத்தில் உருவாக இருக்கிறது. படத்தின் ப்ரோமோ ஷூட் முடிவடைந்துள்ளதாகவும். வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ப்ரோமோவை படக்குழு வெளியிடவுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் `தி மேக்னம் ஓபஸ்' என்ற போஸ்டர் வெளியிட்டு விரைவில் அப்டேட் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது .நாளை படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அட்லீ `இப்படத்தில் கண்டிப்பாக மக்களை சர்ப்ரைஸ் செய்வேன். இப்படம் இந்தியாவின் பெருமை மிக்க திரைப்படமாக இருக்கும்" என கூறியுள்ளார்.
படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.