
தம்பலகாமம் ஈச்சநகர் வனப்பகுதியில் துப்பாக்கி மீட்பு
இலங்கை
தம்பலகாமம் முள்ளிப்பத்தானை ஈச்சநகர் வனப்பகுதியிலிருந்து நேற்று இரவு T-56 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் சூரியபுர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருந்த தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.