• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மஹிந்தவின் உடல் நிலை குறித்து நாமலின் பதில்

இலங்கை

தனது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் வெளியான அண்மைய கூற்றுக்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

இன்று (ஏப்ரல் 7) காலை குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாமல்,

தனது தந்தை நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், ஆன்லைன் வதந்திகளால் கூறப்படுவது போல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
 

Leave a Reply