• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல் 

கனடா

போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுடன் உடன்பட மறுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் மீது மிக மோசமானத் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைனின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரிஹ் மீது ரஷ்ய படைகள் ஏவுகணைத் தாக்குதலை முன்னெடுத்த 24 மணி நேரத்தை அடுத்து தலைநகர் கெய்வ் மீது சரமாரியான தாக்குதல்களை ரஷ்யா நடத்தியுள்ளது.

பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள், காமிகேஸ் ட்ரோன்கள் மற்றும் வான்வழி குண்டுவீச்சு என ரஷ்யா புதிய தாக்குதல்களை மத்திய கெய்வ் மற்றும் பிற இடங்களில் முன்னெடுத்துள்ளது.

குறித்த தாக்குதலில் 9 சிறார்கள் உட்பட 19 பேர்கள் கொல்லப்பட்டதாகவும் தற்போதைய தாக்குதலில் நான்கு Tu-95MS குண்டு வீச்சு விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், மிக ஆபத்தான Kh101 ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி ட்ரம்ப் அழுத்தமளித்து வரும் நிலையில், புடினுக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதை இந்த மிருகத்தனமான தாக்குதல் உறுதி செய்வதாக உக்ரைனும் ஐரோப்பாவும் கண்டனம் தெரிவித்துள்ளன.  

Leave a Reply