
மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
இலங்கை
சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள், முல்லைத்தீவு, வவுனியா, குருணாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இந்த வானிலை எச்சரிக்கை இன்று (06) இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும்.
எனவே, மின்னல் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.