
இஸ்ரேலுக்கு AI தொழில்நுட்பம் வழங்குவதற்கு மைக்ரோசாப்ட் ஊழியர்கள் எதிர்ப்பு
இஸ்ரேலிய இராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கி வருவதற்கு அந்நிறுவனத்தின் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. அப்போது பாலஸ்தீனிய ஆதரவு கொண்ட ஊழியர்கள் கூச்சலிட்டு போராட்டம் நடத்தினர்.
மைக்ரோசாப்ட் AI இன் தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா சுலேமான் பேசிக்கொண்டிருக்கும் ஒரு ஊழியர் "முஸ்தபா, உங்களுக்கு வெட்கமாக இல்லையா" என்று கூச்சலிட்டார்.
அப்போது மற்றொரு ஊழியர் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா அவர்களே, "உங்களுக்கு வெட்கமாக இல்லையா.. நீங்கள் அனைவரும் நயவஞ்சகர்கள்" என்று கூச்சலிட்டார்.
காசா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியபோது இலக்குகளை குறிவைத்து தாக்க மைக்ரோசாப்ட் மற்றும் ஓபன்ஏஐ ஆகியவற்றின் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இஸ்ரேல் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.