• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

இலங்கை

தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் நேற்று இரவு இலங்கைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை வெளிவிவகாரத்துறை மந்திரி விஜித ஹேரத் தலைமையிலான உயர் நிலைக்குழு வரவேற்றது.

இன்று காலை தலைநகர் கொழும்புவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு முப்படைகளின் சம்பிரதாய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். பீரங்கி குண்டுகள் முழங்கவும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: அமெரிக்காவில் எலான் மஸ்க், டிரம்புக்கு எதிராக வெடித்த போராட்டம்

இலங்கைக்கு வருகை தரும் ஒரு தலைவருக்கு முப்படை வரவேற்பு அளிப்பது இது முதல் முறையாகும்.

வரவேற்பு முடிந்ததும் பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர், மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே அறிமுகம் செய்து வைத்தார்.

அதன்பின் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.

திரிகோணமலையின் சம்பூரில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத் திட்டம், தம்புள்ள என்ற இடத்தில் 5 ஆயிரம் மெட்ரிக் டன் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப் படுத்தக்கூடிய குளிர்பதன வசதித் திட்டம், இலங்கை முழுவதும் உள்ள சுமார் 5 ஆயிரம் மத வழிபாட்டுத் தலங்களின் மேற்கூரைகளில் சூரிய மின் தகடுகளை நிறுவும் திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.
இதையும் படியுங்கள்: பலமான நாட்டின், பலவீனமான விமர்சனம்: அமெரிக்காவை சாடிய உக்ரைன் அதிபர்

இதையடுத்து இலங்கை நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி அந்நாட்டின் அதிபர் அனுர குமார திசநாயக கவுரவித்தார்.

பிரதமர் மோடிக்கு இலங்கை நாட்டின் உயரிய விருதான மித்ரா விபூஷணா விருது வழங்கப்பட்டது. அந்த விருதை மோடிக்கு அதிபர் அனுர குமார திச நாயகே அணிவித்தார்.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி கூறியதாவது:

* இது எனது 4-வது இலங்கை வருகை. எனது கடைசி வருகை ஒரு முக்கியமான காலகட்டத்தில் நிகழ்ந்தது. அந்த நேரத்தில், இலங்கை எழுச்சி பெற்று வலுவாக உயரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

* இலங்கை மீண்டும் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் கண்டு நான் இன்று மகிழ்ச்சியடைகிறேன். உண்மையான அண்டை நாடாக இலங்கையுடன் நின்றது எனக்கு பெருமை அளிக்கிறது.

* 2019 பயங்கரவாதத் தாக்குதலாக இருந்தாலும் சரி, கோவிட் தொற்றுநோயாக இருந்தாலும் சரி, சமீபத்திய நிதி நெருக்கடியாக இருந்தாலும் சரி, நாங்கள் எப்போதும் இலங்கை மக்களுடன் உறுதுணையாக இருந்து வருகிறோம்.

* கடினமான காலங்களில் இந்தியா - இலங்கை இணைந்து செயல்பட்டது.

* இலங்கைவாழ் மக்களின் தைரியத்தை நான் பாராட்டுகிறேன்.

* இலங்கை தனது வீழ்ச்சியில் இருந்து வலுவாக எழுந்து வரும்.

* இலங்கை வாழ் தமிழர்களுக்கு 10,000 வீடுகள் கட்டி தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

Leave a Reply