
மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் முதலாவது விமானம்
இலங்கை
மியன்மாரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் முதலாவது விமானம் நாளை (சனிக்கிழமை) மியான்மருக்கு புறப்பட உள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக ஒரு மருத்துவக் குழு மற்றும் மீட்புக் குழு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மனிதாபிமான உதவிகளை விமானம் ஏற்றிச் செல்லவுள்ளது.
குறித்த விமானம் நாளை காலை 7.45 மணிக்கு மியான்மர் நோக்கி புறப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.