
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதியிலிருந்து இன்று வரை 527 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 4 முறைப்பாடுகளும், சட்டத்தை மீறியமை தொடர்பில் 492 முறைப்பாடுகளும் வேறு குற்றங்கள் தொடர்பில் 29 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 71 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளில் 482 முறைப்பாடுகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகவும் 45 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித் தெரிவித்துள்ளார்.