• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ட்ரம்ப் விதித்த வரியால் இலங்கையின் ஆடைத் தொழிற்துறை பாதிக்கும் அபாயம்

இலங்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரியின் காரணமாக இலங்கையில் ஆடைத் தொழில்துறை கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் எனச் சுதந்திர வர்த்தக வலய பொதுச் சேவையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் என்டன் மாகஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்த அவர் இவ்  விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையீடு செய்து உரியத் தீர்வை பெற்று தருவது அவசியமாகும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அமெரிக்காவின் புதிய வரி காரணமாகத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க நேரிடும் எனவும்  அது தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு உரியப் பதிலை வழங்கும் எனத் தான் நம்புவதாகவும், சுதந்திர வர்த்தக வலய பொதுச் சேவையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் என்டன் மாகஸ் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply