• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வீர தீர சூரன்-படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டு முதல் பாகத்தை எதிர்பார்க்க வைத்து இருக்கிறார் இயக்குநர் S.U.அருண்குமார்.

சினிமா

இவர்,ஏற்கெனவே இயக்கிய திரைப்படங்கள், 'பண்ணையாரும் பத்மினியும்' 'சேதுபதி' 'சிந்துபாத்' 'சித்தா'.
'வீர தீர சூர'படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு வித எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறார்,இயக்குநர்.
விசேஷம் நடக்கப்போகும் ஒருபெரிய வீட்டின் முன்பு ஒரு பெண் தனது ஏழு வயதுமகளுடன் வந்து தனது புருஷனைக் காணவில்லை என்று சொல்லி வீட்டில் உள்ளவர்களையெல்லாம் கண்டபடி திட்டுகிறாள்,சபிக்கிறாள்.
இதை எதையும்பொருட்படுத்தாத மாதிரி வீட்டில்உள்ளவர்கள் அவர்கள் பாட்டுக்கு தங்களுடைய வேலையை பார்க்கிறார்கள்.வீட்டின் மூத்தமகன் கண்ணன்(சுராஜ் வெஞ்சரமுடு)மட்டும் கோபம் கொண்டாலும் அடக்கி வாசிக்கிறான்.
இந்தக் காட்சியை மிக இயல்பாக படமாக்கியிருந்தார்கள்.
யார் அந்த பெண்?எதற்காக இவர்கள் வீட்டு முன் வந்து சண்டையிடுகிறாள் என்பதைப் பற்றிய ஆர்வம் நமக்கு ஏற்படுகிறது.
ஊர் மக்களால் பெரியவர் என அழைக்கப்படுபவர் ரௌடிஷம் தொழிலை செய்து கொண்டிருக்கிறார்.White Caller கேடி.இவருக்கு துணையாக ஒரு மகன் கண்ணன்(சுராஜ் வெஞ்சரமுடு).ஆத்திரக்காரன்.பொறுமையில்லாதவன்.அப்பா பொறுமையாக இருந்து சூழலுக்கேற்ற மாதிரி Sketch போட்டு தூக்க நினைப்பவர்.
இந்த அயோக்கியர்களை Encounter செய்ய நல்லதொரு வாய்ப்பு அமைகிறது SP அருணகிரிக்கு(SJ சூர்யா).இவர்களுக்கிடையேயுள்ள முன்பகையும் முக்கியக்காரணம்.
இதையறிந்து கொண்ட பெரியவர் SP-யிடம் கெஞ்சி முறையிட்டும், அவர் இவர்களை போட்டுத் தள்ளுவதில் குறியாக இருப்பதை புரிந்து கொண்டு அவனுக்கு முன்பாக SP-யை இவர்கள் போட்டுத்தள்ள திட்டமிடுகிறார்கள்.
இதை பிசிறு இல்லாமல் செய்து முடிக்க காளியால்(விக்ரம்)மட்டுமே முடியும்.அவனோ,இந்த அடிதடியே வேண்டாமென்று முடிவுசெய்து சொந்த ஊருக்கு சென்று மளிகை நடத்தி மனைவி குழந்தைகளோடு சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகிறான்.
பெரியவர் காளியின் காலில் விழுந்து கெஞ்சுகிறார்.இரக்கப்பட்டு S.P.யை கொலை செய்ய ஒத்துக் கொள்கிறான்.
இப்படி ஒருவருக்கொருவர் போட்டுத்தள்ள திட்டம் தீட்டுவது எதில் போய் முடிகிறது என்பதுதான் மிச்சம் மீதிக் கதை.
காளியின் கதாபாத்திரத்திற்கு மிக சரியான தேர்வு விக்ரம்தான்.பத்துபேரை அடிச்சாலும் நம்பும்படியா உடல் அமைப்பு இருக்கணுமில்லையா?
ஒரே இரவில் நடக்கும் கதை.அந்த இரவு நேர பதட்டத்தை தான் அமைத்த ஒளியமைப்பால் அழகாக நமக்கு கடத்துகிறார் ஒளிப்பதிவு இயக்குநர் தேனீ ஈஸ்வர் அவர்கள்.
G.V.பிரகாஷ்குமாரின் பின்னணி இசையானது காட்சிகளுக்கு மிகுந்த பக்கபலமாக உள்ளது என உறுதியாக சொல்லலாம்.படம் நெடுக பின்னணி இசையிருந்தாலும் வசனங்களை சேதாரம் செய்யாமல் காட்சிகளுக்கு மேலும் வலு சேர்த்து இருக்கிறார் என்றுதான் சொல்லணும்.
இப்பொழுது வரும் சமீப கால தமிழ்திரைப்படங்களில் பெண்கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.
அந்த வகையில் துஷாரா விஜயனின் கதாபாத்திரமும் சிறப்பான ஒன்றே.

நல்லா வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிற நேரத்தில் பெரியவர் தனது கணவனை தேடி வந்ததிலிருந்து அவள் நிம்மதியிழக்க ஆரம்பிக்கிறாள்.படம் நெடுக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.துஷாரா விஜயன் மிக சிறப்பாகவே நடித்துள்ளார்.
பெரியவராக நடித்த பிருத்விராஜ்,இவருடைய மகனாக நடித்த சுராஜ் வெஞ்சரமுடு மற்றும் இவர்களுடைய குடும்பத்தை சார்ந்தவர்களாக நடித்த அனைவருமே மிக இயல்பாகவே நடித்துள்ளனர்.
S.J.சூர்யாவின் உடல்மொழியும்,Diologue delivery-ம் Excellent.
முதல் பாகத்தில் எதை எதை கொண்டு வருவார்கள்?
பெரியவர் குடும்பத்துக்கும் காளிக்கும் உள்ள தொடர்பு.
காளி,ஏற்கெனவே குழந்தை ஒன்றுள்ள துஷாரா விஜயனை காதலித்து திருமணம் செய்ய வேண்டிய பின்னணி என்ன?
S.P.அருணகிரிக்கும்(S.J.சூர்யா)பெரியவர் குடும்பத்துக்கும் உள்ள முன்பகை என்ன?
இவையெல்லாம் Part-1-ல் இடம் பெறும் என நினைக்கிறேன்.
குறையாக நினைப்பது,1-St Half-ல் உள்ள திரைக்கதை நேர்த்தி 2-nd Half-ல் இல்லாமல் போனது.
மற்றபடி,"வீர தீர சூரன்"வென்று விட்டான்.
இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்.

 

நன்றி,வணக்கம்.
சே மணிசேகரன்.
 

Leave a Reply