• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த கியூப் பிரஜை கைது

கனடா

கனடா – அமெரிக்க எல்லைப் பகுதியின் ஊடாக கனடாவிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்த கியூப பிரஜை ஒருவரை கனடிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஒரு கியூபா நாட்டவர், ஃபோர்ட் எரி இன்டர்நேஷனல் ரெயில்வே பாலத்தை கடந்து ஓடிக்கொண்டு கனடாவில் நுழைய முயன்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓடிக்கொண்டே நாட்டின் எல்லைக்குள் பிரவேசிக்க முயற்சித்த நபரை அதிகாரிகள் இணைந்து கைது செய்துள்ளனர்.

கனடாவின் பீஸ் பிரிட்ஜ் எல்லைப் பகுதியில் CBSA (Canada Border Services Agency) அதிகாரிகள் விசாரணை நடத்தியதுடன், இந்த நபர் கனடாவில் நுழைய தகுதி பெறவில்லை என்பதால், அவரை அதே நாளில் மீண்டும் அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

அண்மைக் காலமாக பலர் சட்டவிரோதமாக கனடாவில் நுழைய முயன்றுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் அமெரிக்காவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 
 

Leave a Reply