• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடா முதலீட்டாளரிடம் பல கோடிகளை மோசடி செய்த அருண் மட்டக்களப்பில் அதிரடிக் கைது 

கனடா

கனடாவில் வசிக்கும் முதலீட்டாளர் ஒருவரிடம் இருந்து 4 கோடி ரூபா பணத்தினை மோசடி செய்த குற்றத்திற்காகவே அருண் தம்பிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் இருக்கும் முதலீட்டாளர் ஒருவர் மட்டக்களப்பில் இறால் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளார்.

சுமார் 10 கோடி முதலீட்டில் இந்த திட்டத்தினை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், அதில் 4 கோடி ரூபா பணம் அருண் தம்பிமுத்துவிடம் வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 4 கோடி ரூபாவிற்கான பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல், மொத்தப் பணத்தினையும் அருண் தம்பிமுத்து மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த முதலீட்டாளர் நிதி மோசடி தொடர்பில் அருண் தம்பிமுத்துவுக்கு எதிராக முறைப்பாடளித்திருந்த நிலையில், இன்றையதினம் அவர் பாசிக்குடா பகுதிக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து  இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி மோசடி பிரிவினரால் பாசிக்குடா பகுதியில் வைத்து அவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். 

வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவரிடம் இருந்து 4 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தினை மோசடிச் செய்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கனடா முதலீட்டாளரிடம் பல கோடிகளை மோசடி செய்த அருண் மட்டக்களப்பில் அதிரடிக் கைது | Arun Thambimuththu Arrested

இதனையடுத்து,  மோசடிக்கு இலக்கான வெளிநாட்டவரின் முறைப்பாட்டுக்கு அமைய அருண் தம்பிமுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

Leave a Reply