• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திரையரங்குகள் கிடைக்காமல் தவிக்கும் உயிர் மூச்சு திரைப்படம்

சினிமா

பிராட்வே சுந்தர் இயக்கத்தில் தீபா சங்கர், மீசை ராஜேந்திரன், கிங்காங், டெலிபோன் ராஜ், பெஞ்சமின்,விக்னேஷ்,சஹானா ஆகியோர் நடித்த உயிர் மூச்சு திரைப்படம் ஏப்ரல் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகிறது..

முதலுதவி பற்றிய மையக்கருத்துடன் வரதட்சணை கொடுமை, லஞ்சம் ஊழல், மதுபோதையால் ஏற்படும் சீரழிவு பற்றிய கதை களத்துடன்., தமிழ் திரை உலகில் முதன் முதலில் வில்லனாக அறிமுகமாகும் டெலிபோன் ராஜின் வில்லத்தனத்தில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகி இருக்கும் உயிர் மூச்சு திரைப்படம் தியேட்டர்கள் கிடைக்காமல் தவித்து வருகிறது...

இது பற்றி நடிகர் மீசை ராஜேந்திரன் கூறும் போது..

நான் இதுவரை ஏற்காத புதிய வேடத்தில் உயிர் மூச்சு திரைப்படத்தில் நடித்திருக்கிறேன்.. நடிகை தீபாவின் நீதிமன்ற காட்சி வரும்போது நான் என்னை அறியாமல் கண் கலங்கி விட்டேன் அந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்..

இன்றைய காலகட்டத்திற்கு தேவையான கதையை அத்திமரப்பட்டி விவசாயி ஜோதிமணி எழுதியிருக்கிறார்., தற்போது கோடைகால விடுமுறையில் பெரிய நடிகர்களின் படங்கள் பல வருவதால் நல்ல கதை அம்சம் கொண்ட உயிர் மூச்சு திரைப்படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.. விரைவில் தமிழகமெங்கும் இந்த திரைப்படத்திற்கு தியேட்டரில் அதிகரிக்கும் என நம்புகிறேன் என்று கூறினார்..

இந்த திரைப்படத்தை இயக்கிய பிராட்வே சுந்தர் ஏற்கனவே அரசியல் சதுரங்கம், விதி எண் 3, கருப்பு பக்கம் ஆகிய திரைப்படங்களை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply