
கனடா சிறைகளில் கைதிகளுக்கு இணைய வசதி
கனடா
கனடாவின் மத்திய அரசு சிறைகளில் முதன்முறையாக கைதிகளுக்கு இணைய சேவையை அறிமுகப்படுத்துகின்றன.
கல்விக்கான வாய்ப்புகளை வழங்குதல் மெய்நிகர் அனுபவங்களை (Virtual Reality) உருவாக்குதல் உள்ளிட்ட நோக்கங்களின் அடிப்படையில் இந்த சேவை அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாற்றம் நீண்ட கால தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைய உதவியாக அமைகிறது.
ஆனால், ஆபத்துகளை தவிர்த்து பயன்களை அதிகரிக்க திருத்தச்சேவை (Correctional Service Canada) போராடி வருகிறது.
ஓன்டாரியோவிற்கு அருகிலுள்ள பாத் (Bath) சிறையில் இந்த இணைய திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.
கைதிகள் புதிய திறன்களை வளர்த்துக்கொண்டு, சிறைவாசத்திற்குப் பிறகு நல்ல வழியில் வாழ இந்த திட்டம் உதவும் என தெரிவிக்கப்படுகின்றது.
வரையறுக்கப்பட்ட அடிப்படையில் கைதிகளுக்கு இவ்வாறு இணைய வசதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.