கனடாவின் Markham நகரில் படுகொலை செய்யப்பட்ட 20 வயது அழகிய இளம் தமிழ்ப் பெண்ணின் மரணம்
கனடா
கனடாவின் Markham நகரில் படுகொலை செய்யப்பட்ட 20 வயது அழகிய இளம் தமிழ்ப் பெண்ணின் மரணம் சம்பந்தமாக இருவரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
நிலக்ஷி ரகுதாஸ் என்ற இந்த இலங்கை தமிழ் இளம் பெண் கடந்த மாதம் 7ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 6:30 மணியளவில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
Markham நகரின் Markham/Major McKenzie சந்திப்புக்கு அருகில் Solace Rdஇல் உள்ள வீடு ஒன்றில் தனது பெற்றோருடனும் இரண்டு சகோதரர்களுடனும் நிலக்ஷி வசித்து வந்தார். தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கயில், காலை படுக்கையிலேயே வைத்து நிலக்ஷி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் டாக்ஸியில் தப்பிச் செல்வதை சிசிடிவி காட்சிகள் காட்டுவதாக பொலிஸார் தெரிவித்திருந்தார்கள்.
கொலையாளிகளின் இலக்கு நிலக்ஷி அல்லவென்றும் அவரது சகோதரரே என்றும் நம்பப்படுகிறது.
அதே வீட்டில் படுத்திருந்த 26 வயதுடைய அவருடைய சகோதரர் மீதும் பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப் பட்டிருந்த நிலையில் அவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சகோதரரின் காயங்கள் கடுமையானவை, ஆனால் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாயும் துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது.
அந்த வீட்டின் மீது இதற்கு முன்பு 5 தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப் பட்டிருந்த அதேவேளை, கடந்த வருடம் மட்டும் மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், சந்தேக நபர்கள் தூரத்திலிருந்தே வீட்டை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும், இந்த தடவை வீட்டினுள்ளேயே புகுந்து விட்டதாகவும் போலீசார் தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில் விசாரணைகளை முடுக்கிவிட்ட போலீசார் 35 வயதான Heshmat RASOULI-KALANTARZADE என்பவரை Torontoவில் வைத்து நேற்றுக் கைது செய்திருக்கிறார்கள். இவர் வேறு குற்றச்சாட்டுகளில் நீதிமன்றத்தின் பிணையில் வெளிவந்திருந்தவர் என்று York பிராந்திய போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.
முன்னதாக, Aekwon MURRAY என்ற Torontoவைச் சேர்ந்த 28 வயது வாலிபர் மீது, நிலக்ஷியின் கொலை சம்பந்தமாக, அதற்கு முதல் தினம்(March 31ம் தேதி), 1ந் தர கொலை குற்றச்சாட்டை போலீசார் சுமத்தி இருந்தார்கள். வேறு பல குற்றச்சாட்டுகளின் மீது March 21ம் தேதி போலீசாரினால் Aekwon MURRAY கைது செய்யப்பட்டு விளக்க மறியல் சிறையில் வைக்கப்பட்டிருந்தபோதே இந்த கொலை குற்றச்சாட்டும் அவர் மீது 31ம் தேதி சுமத்தப் பட்டிருக்கிறது.
நிலக்ஷியின் சகோதரர்கள் Towing தொழில் துறையில் ஈடு பட்டிருந்த நிலையில், அந்த வர்த்தகத்தில் ஏற்பட்டிருந்த போட்டியே இந்த துப்பாக்கி பிரயோகத்திற்கு காரணம் என்றும் நம்பப்படுகிறது. Tornto மாநகர சபையினால் நிலக்ஷியின் சகோதரர் ஒருவருக்கு 2023ம் ஆண்டு Towing License அனுமதிக்கப் பட்டிருந்தது.
கோண்டாவில் மேற்கு பகுதியை பிறப்படமாகக் கொண்ட நிலக்ஷி ரகுதாஸ், இரண்டு வருடங்களுக்கு முன்னரே கனடாவில் குடியேறி இருந்தார். நிலக்ஷியின் பூட்டன் துரையப்பா ஒரு சிங்கப்பூர் பென்சனியர். துரையப்பா மகன் பாலசுப்பிரமணியம், அவர் மகன் ரகுதாஸ், அவரின் மகள் நிலக்ஷி.
சில ஊடகங்களில் வெளிவந்த செய்திகளில், நிலக்ஷியின் பூட்டன் துரையப்பா யாழ்ப்பாண முன்னாள் மேயர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
யாழ்ப்பாண முன்னாள் மேயர் துரையப்பாவுக்கும் நிலக்ஷிக்கும் வித வித சம்பந்தமும் கிடையாது, இருவரும் உறவினர்களும் அல்ல என்று நிலக்ஷியின் உறவினர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.






















