• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உணவுப் பொருட்களின் விலை மேலும் உயர்வடையலாம்

இலங்கை

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை முறையாக அமுல்படுத்தாவிடின் எதிர்வரும் இரு வாரங்களில் ஹோட்டல் உணவு பொருட்களின் விலை மேலும் உயரும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ள போதிலும் சந்தையில் எவரும் கட்டுப்பாட்டு விலைக்கு அமைய அரிசியை விற்பனை செய்வதில்லை என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசி வகைகளை கட்டுப்பாட்டு விலைக்கு பெறுவது கடினமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை சந்தையில் முறையாக அமுல்படுத்தாவிடின் எதிர்வரும் ஓரிரு வாரத்தில் ஹோட்டல் உணவு பொருட்களின் விலைகளை அதிகரிக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பால்மாவின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் விலையேற்றத்துக்கு அமையவே ஹோட்டல் உணவுப் பொருட்களின் விலைகள் தீர்மானிக்கப்படுவதாகவும் சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை வர்த்தகர்கள் தீர்மானித்துக் கொள்வார்களாயின் அரசாங்கம் எதற்கு எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Leave a Reply