• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கித்துள், தென்னை மற்றும் பனை கைத்தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு காப்புறுதித் திட்டம்

இலங்கை

கித்துள், தென்னை மற்றும் பனை தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் புதுப்பிக்கக்கூடிய வகையில் திடீர் விபத்து உயிர் காப்புறுதி திட்டத்தை அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

இந்த முன்மொழியப்பட்ட திட்டத்தின் கீழ், 5 இலட்சம், 10 இலட்சம் மற்றும் 20 இலட்சம் ரூபாய் என்ற காப்புறுதி தொகைகள் மரணம் அல்லது முழுமையான ஊனமுற்ற நிலை ஏற்படும் போது வழங்கப்படும் என கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

மேலும், தற்காலிக ஊனமுற்ற நிலைகளிலும், திடீர் விபத்துகளால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதும் இந்த காப்புறுதி பலன்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இக்  காப்புறுதி பாதுகாப்பை 2000, 4000 மற்றும் 8000 ரூபாய் போன்ற குறைந்த ஆண்டு பிரீமியம் மட்டங்களின் கீழ் பெறுவதற்கு வாய்ப்பு வழங்குவதற்கு கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை  திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply