
இஷாரா செவ்வந்தியை கண்டுபிடிக்க அனுராதபுரத்தில் தேடல்
இலங்கை
அனுராதபுரம் பகுதியில் திட்டமிட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ கொலையில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்தியை தேடும் நடவடிக்கை நேற்று (01)மேற்கொள்ளப்பட்டது.
அந்த பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அவர் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
அங்கு அவரைப் போல தோற்றமளித்த ஒரு பெண்ணையும் மற்றொரு ஆணையும் பொலிஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து போதைப்பொருள் மற்றும் இரண்டு சொகுசு கார்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை பொலிஸாரால் கைது செய்ய முடியவில்லை.
இதேவேளை, கம்பஹா – உக்கல்பொட பகுதியில், பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யச் சென்ற போது ஏற்பட்ட போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.