• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜூலையில் பேருந்துக் கட்டணம் உயர்வடையும் சாத்தியம்

இலங்கை

எதிர்வரும் ஜுலை மாதத்தில் கண்டிப்பாக பேருந்து கட்டணங்கள் கணிசமாக உயர்வடையும்  என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் நேற்று (31) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

இதன்போது ‘டீசல் விலையை கணிசமான அளவு குறைத்திருந்தால், பேருந்து கட்டணத்தின் பலன் மக்களுக்கு கிடைத்திருக்கும் எனவும்,  ஆனால் தற்போது பெட்ரோல் குறைக்கப்பட்டுள்ளது எனவும், எனவே ஜூலையில், பேருந்து கட்டணம் கணிசமான அளவு உயர்வடையும் எனவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply