• Welcome to TamilsGuide
செய்திகள் 1

2025 இன் முதல் காலாண்டில் 722,276 சுற்றுலா பயணிகள் வருகை

இலங்கை

கடந்த மார்ச் மாதம் மொத்தம் 229,298 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) தெரிவித்துள்ளது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டுக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 722,276 ஆக உள்ளது.

மார்ச் மாதம் முழுவதும், வாராந்திர சுற்றுலாப் பயணிகளின் வருகை 50,000 ஐத் தாண்டியது.

மார்ச் 28 அன்று அதிகபட்சமாக ஒரு நாள் வருகை பதிவாகியுள்ளது.

அப்போது 8,619 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் நுழைந்தனர்.

மார்ச் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியா அதிகபட்ச பங்கைக் கொண்டிருந்தது.

மொத்தத்தில் 17.1% பங்களித்து, 39,212 சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர்.

அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்த பிற முக்கிய நாடுகள் பின்வருமாறு:

• ரஷ்யா – 29,177 சுற்றுலா பயணிகள் வருகை

• பிரித்தானியா – 22,447 சுற்றுலா பயணிகள் வருகை

• ஜேர்மனி – 17,918 சுற்றுலா பயணிகள் வருகை
 

Leave a Reply