
குட் பேட் அக்லி படத்தின் Runtime தகவல் வெளியீடு
சினிமா
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்பொழுது படத்தின் செக்ண்ட் சிங்கிளான God Bless U பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடல் வெளியாகி யூடியூபில் 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
இந்நிலையில் படத்தின் நேரளவின் தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் 2 மணிநேரம் 18 நிமிடங்களாக இருக்கிறது. தணிக்கை குழுவிடம் சென்று வந்ததற்கு பிறகு ஒரு சில நிமிடங்கள் குறையலாம். ஒரு பக்கா மாஸ் கமெர்ச்ஷியல் திரைப்படத்திற்கு தேவையான எல்லாமே இப்படத்தில் அமைந்துள்ளது.