
உள்ளூராட்சி தேர்தல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
இலங்கை
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, மேற்படி உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகளை நாளை, (2025 ஏப்ரல் 02) வரை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்களால் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட பின்னர் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பரில், உள்ளூராட்சித் தேர்தலுக்கு புதிய வேட்புமனுக்கள் கோருவதற்கு அனுமதிக்கும் வகையில் உள்ளூராட்சிச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
முன்னர் வேட்புமனுக்களை சமர்ப்பித்த சிலர் காலமானதாலும், சிலர் நாட்டை விட்டு வெளியேறியதாலும் அல்லது கட்சி மாறியதாலும் புதிய வேட்புமனுக்களை அழைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது.
இருப்பினும், இந்த முடிவை நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டது.